பீகாரில் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு - புதிய கட்சி உதயம்

பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சத்யானந்த் சர்மா தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பலர் பஸ்வானின் குடும்ப அரசியலை எதிர்த்து வெளியேறி, மதச்சார்பற்ற லோக் ஜனசக்தி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.

பீகாரில் பஸ்வான் லோக் ஜனசக்தி கட்சி பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணிக் கட்சியாக இருந்து வருகிறது. தற்போது முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி அனைத்திலுமே வெற்றி கண்டது. பஸ்வானும், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் தவறாமல் இடம் பெற்று வருகிறார். சமீப காலமாக தனது மகனான சிராக் பஸ்வானையும் கட்சியில் வாரிசாக உருவாக்கி விட்டார். இது கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலரையும் எரிச்சலடையச் செய்துவிட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த கட்சியின் பொதுச் செயலாளர் சத்யானந்த் சர்மா, 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் கட்சியிளிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

லோக் ஜனசக்தி கட்சியில் காலம் காலமாக உழைத்த பல தலைவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. பஸ் வான் குடும்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது என்று குற்றம் சாட்டிய சத்யானந்த் சர்மா, மதச்சார்பற்ற லோக் ஜனசக்தி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்களவை துணை சபாநாயகர் யார்? ஒய்எஸ்ஆர் கட்சிக்கு பாஜக தூண்டில் ... மவுனம் சாதிக்கும் ஜெகன்