காஷ்மீருக்கான சலுகை ரத்து ஏன்? இன்று மாலை ரேடியோவில் மோடி பேசுகிறார்

PM Modi to address the nation in All India Radio broadcast at 4 pm today

by எஸ். எம். கணபதி, Aug 8, 2019, 12:17 PM IST

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றுகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அவர் பேசவிருக்கிறார்.


பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது ஆல் இந்தியா ரேடியோவில் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். கடைசியாக, மார்ச் 27ம் தேதியன்று ஏ-சாட் ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட போது பேசினார். தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக உள்ள நிலையில், அவர் ரேடியோவில் உரையாற்றியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.


தற்போது, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள், இவற்றால் நாட்டுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் உரையாற்றுகிறார்.

காஷ்மீர் விவகாரம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

You'r reading காஷ்மீருக்கான சலுகை ரத்து ஏன்? இன்று மாலை ரேடியோவில் மோடி பேசுகிறார் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை