காங்கிரஸ் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு; தற்காலிகமாக பொறுப்பு ஏற்கிறார்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அவர் தற்காலிகமாக இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

 


நூற்றி முப்பத்தி நான்கு ஆண்டு வரலாறு கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இது வரை இல்லாத சோதனையாக தலைவரே இல்லாத நிலைக்கு வந்திருந்தது. இதற்கு காரணம், கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதுதான். இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த ஜூன் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார்.

 

அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அகமது படேல், ப.சிதம்பரம், அந்தோணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்ய மாநில தலைவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாநில தலைவர்களிடம் கருத்து கேட்பதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. சோனியா தலைமையிலான குழு, கிழக்கு பிராந்தியத்திலும், ராகுல் தலைமையிலான குழு மேற்கு பிராந்தியத்திலும், பிரியங்கா தலைமையிலான குழு வடக்கு பிராந்தியத்தில் ஒரு பகுதியிலும், மன்மோகன் தலைமையிலான குழு தெற்கு பிராந்தியத்திலும், அம்பிகா சோனி தலைமையிலான குழு வடகிழக்கு பிராந்தியத்திலும் கருத்துக்களை கேட்பதாக கூறப்பட்டது.


ஆனால், சோனியாவும், ராகுலும் அதை ஏற்கவில்லை. அவர்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் எந்த குழுவிலும் இடம் பெற மாட்டோம் என்று கூறி விட்டு, செயற்குழுவில் இருந்து வெளியேறினர். இதன்பின், மூத்த தலைவர்கள், மாநில தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டனர். கூட்டத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜாக்கர், ‘‘கட்சியில் இருந்து பலர் வெளியேறி விட்டனர்.

 

இந்த சூழலில் ராகுல்காந்தியைத் தவிர யார் தலைவராக வந்தாலும் கட்சிக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, ராகுல்காந்தியை பிரியங்கா காந்தி சமாதானப்படுத்தி, அவரையே தலைவராக பதவியேற்கச் சொல்ல வேண்டும்’’ என்றார். இதே போல், பல மாநில தலைவர்களும் ராகுல்காந்தியே தலைவராக நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறியுள்ளனர்.
இதன்பின்னர், மீண்டும் இரவு 9 மணிக்கு காங்கிரஸ் செயற்குழு கூடியது. இதில், மாநில தலைவர்களின் கருத்துக்களை கேட்ட 5 குழுக்களின் அறிக்கை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதித்தனர். எனினும், இரவு 11 மணி வரை நீடித்த கூட்டத்தில் ஒரு புதிய தலைவரை ஒருமனதாக தேர்வு செய்ய முடியவில்லை.

 

இதையடுத்து, ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வது என்றும், தற்போதைக்கு சோனியாவே மீண்டும் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதை சோனியா காந்தியும் ஏற்றுக் கொண்டார்.


கூட்டத்திற்கு பின்னர், கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘சோனியா காந்தி புதிய தலைவர்’’ என்று கூறினார். இதன்பின், செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘ராகுல் காந்தியை மீண்டும் தலைமைப் பொறுப்பு ஏற்க வலியுறுத்தினோம். அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டோம். இப்போதைக்கு தலைவர் பதவியை தற்காலிகமாக ஏற்று கொள்ள சோனியாவை வலியுறுத்தினோம். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அடுத்த தலைவரை தேர்வு செய்யும் வரை சோனியாவே தலைவராக நீடிப்பார்’’ என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
D-G-of-Shipping-issued-show-cause-notice-to-k-salagiri-on-allegations-against-his-college
காங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல்? விளக்கம் கேட்கிறது கப்பல் துறை
chief-minister-inagurated-special-grievances-redressal-scheme
சிறப்பு குறைதீர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்
Modi-Led-Government-To-Be-In-Power-For-Next-25-Years-Goa-Chief-Minister
25 வருஷம் மோடி ஆட்சிதான்; கோவா முதலமைச்சர் அறிவிப்பு?
Will-Surrender-In-4-Days-Bihar-MLA-After-AK-47-Found-At-His-Home
ஏ.கே.47 பறிமுதல் விவகாரம்; வீடியோ வெளியிட்ட எம்.எல்.ஏ
Karnataka-CM-BS-Eddiyurappa-expands-his-cabinet-tomorrow
கர்நாடக அமைச்சர்கள் பட்டியல் ஒரு வழியாக தயார்; முதற்கட்டமாக 15 பேர் நாளை பதவியேற்பு
Why-milk-price-raised--chief-minister-replied.
ஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்? முதலமைச்சர் விளக்கம்
dmdk-will-celebrate-party-annual-day-function-in-Tirupur-on-sep15
செப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா
Red-carpet-welcome-to-PM-Modi-in-Bhutan-for-his-2-days-visit
பிரதமர் மோடி பூடான் பயணம்; சிவப்புக் கம்பள வரவேற்பு
Criminal-case-against-Priyanka-Gandhi-for-her-tweet-on-Pehlu-Khan-lynching-case-verdict
பிரியங்கா காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஜெய்ப்பூர் கோர்ட்டில் தாக்கல்
BS-Yeddyurappa-remains-one-man-cabinet-in-Karnataka-last-23-days-when-is-cabinet-expansion
கர்நாடகா : 23 நாளாக நீடிக்கும் எடியூரப்பாவின் ஒன்மேன் ராஜ்ஜியம் ; அமைச்சரவை பட்டியல் எப்போது?
Tag Clouds