பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மனைவி காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Kulsoom Nawaz

ஊழல் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோர் ரவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீண்ட காலமாக புற்றுநோயினால் அவர் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி குல்சும் நவாஸ் இன்று உயிரிழந்துவிட்டார். இந்த தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குல்சும் காலமானதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் பரோலில் வர வாய்ப்புள்ளதான கூறப்படுகிறது.

READ MORE ABOUT :