கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாள்... ஸ்டாலின் பேச்சு

கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாள்- ஸ்டாலின்

Sep 15, 2018, 22:23 PM IST

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

MK Stalin

தந்தை பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், திமுக.உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக திமுக.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் விழுப்புரத்தில் முப்பெரும் விழா தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் விழா நடைபெற்று வருகிறது. சிறப்பாக பணியாற்றி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது. பின்னர் பேசிய ஸ்டாலின், "கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். கருணாநிதி பெயரில் தொடங்கப்படும் அறக்கட்டளை மூலம் குடிமைப்பணி பயிற்சி மையமும், நோயாளிகள் சிகிச்சை பெற நிதியுதவியும் வழங்கப்படும்." என்றார்

"பாஜக அரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா? என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். கருணாநிதி மகன் சாதித்தான் என்பதை நிரூபிக்க, நீங்கள் உதவ வேண்டும்." என பொதுமக்களிடம் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

You'r reading கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாள்... ஸ்டாலின் பேச்சு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை