"கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு" என்று கண்களை பற்றி வர்ணிக்காத கவிஞர்களைப் பார்த்திருக்க முடியாது.நம் உடலில் கண் முக்கியம் அங்கம் வகிக்கிறது. அதோடு அகத்தின் அழகு முகத்தில் உள்ள கண்களிள் மட்டுமே காணமுடியும்.
உங்களில் அனைவருமே அலுவலகத்திற்கு செல்லும்போதும் சரி, வீட்டு விஷேசத்திற்கு செல்லும் போதும் சரி, மேக்கப் இல்லாமல் போகமுடியாது. எப்பொழுதும் போல மேக்கப் போடுவோம் ஆனால் அதில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது,உங்களுக்கு அழகையும் கூட்டிக் காட்டாது.
நான் இங்கு குறிப்பிட்ட அழகு குறிப்பு உங்கள் கண்களை மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் மாற்றும். இதோ அந்த டிப்ஸ்...
*கண் இமைகள் அடர்ந்து காண, கருப்பு நிற மஸ்காராவை உபயோகியுங்கள். சிங்கிள் கோட் போதாதென்றால் டபுள் கோட் போடுங்கள். அதற்கென்று மஸ்காராவை அதிகமாகவும் பயன்படுத்த கூடாது.ஏனென்றால் அவை கலைந்து அசிங்கமாக தோற்றமளிக்கும்.
*கண்களின் இமைகளுக்கு மேல் காஜலை பயன்படுத்தி அடர்த்தியான கோடு வரையுங்கள். அதிலும் அந்த கோடு, மூக்கின் பக்கத்திலிருந்து மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.
*கண்களுக்கு உபயோகிக்கும் ஐ-லைனர் பென்சிலாக இருந்தால் மிக நல்லது.
*கண்களின் கீழ் இமைகளில் ப்ரௌன் அல்லது காப்பி நிற ஐ-லைனரை உபயோகிப்பது நல்லது.ஏனெனில் மேல் இமையில் போடப்பட்டுள்ள காஜலை சற்று அழகாக வெளிப்படுத்தும்.
*பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவது நல்லது. முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
இனி ஒவ்வொருமுறையும் மேக்கப் போடும்போது நான் சொன்ன டிப்ஸ்களை பயன்படுத்தி பாருங்க...கண்டிப்பா உங்க கண்ண பாத்து சொக்கிபோய் நிப்பாங்க...