தமிழக அரசு இந்துக்களை பயமுறுத்துகிறது: தமிழிசை குற்றச்சாட்டு

by Isaivaani, Oct 9, 2018, 07:51 AM IST

விழாக்கள் நடைபெறுவதற்கு ஆதரவு அளிக்காமல், இந்துக்களை தமிழக அரசு அச்சுறுத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் முன்பு, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி மஹா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை துவக்க நிகழச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை அமைப்பின் மாநில தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மேலும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ரத யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பிறகு, தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கரனி நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் படித்துறைகள் அரசு சுத்தம் செய்யாததால், 146 படித்துறைகளை இந்து சமய பக்தர்களும், சாதுக்களும், பாஜகவினரும் சுத்தம் செய்தனர். அதிலும், இரண்டு படித்துறைகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. தமிழக அரசு இந்துக்களை அச்சுறுத்துகிறது.

மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் துணை வேந்தர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடக்கை எடுப்பது தான் தமிழக அரசின் கடமையை தவிர, ஆட்சியில் இல்லாத எங்களிடம் ஆதாரம் கேட்பது என்ன நியாயம் ? என்றார்.

You'r reading தமிழக அரசு இந்துக்களை பயமுறுத்துகிறது: தமிழிசை குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை