தொடர் ஏற்றத்தில் பெட்ரோல் விலை: இன்று 24 காசுகள் உயர்வு

by Isaivaani, Oct 9, 2018, 07:09 AM IST

சென்னையில் பெட்ரோல் விலையில் 24 காசுகளும், டீசல் விலையில் 31 காசுகளும் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் உற்படத்தி சரிவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்ட மாதங்களாக தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலையை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.85.26க்கும், டீசல் விலை ரூ.78.04க்கும் விற்பனையானது. இதேபோல், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.85.50க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.78.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஏற்றம் அடைந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால், அதனை சமாளிக்க முடியாமல் நடுத்தர மக்கள் புலம்பி வருகின்றனர்.

You'r reading தொடர் ஏற்றத்தில் பெட்ரோல் விலை: இன்று 24 காசுகள் உயர்வு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை