மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
பிரபல மூத்த பத்திரிக்கையாளரும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்காமல் மத்திய அரசு மௌனம் காத்து வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தற்போது வாய்திறந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, எம்.ஜே. அக்பருக்கு எதிரான சமூக வலைத் தளங்களில் வந்த குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். எம்.ஜே. அக்பருக்கு மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட வேண்டும். அதன் பிறகே அவர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.