18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்- ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பு அளித்து இருப்பதால் அதிமுக அரசு பிழைத்துக் கொண்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடிதம் கொடுத்தனர். இதனால், சபாநாயகரால் 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இதனால், மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணன் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டு தெரிந்துக் கொண்டார். பின்னர், கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி முதல் தனது விசாரணையை தொடங்கினார்.

விசாரணையின்போது, டிடிவி தினகரன் தரப்பை தொடர்ந்து, சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி நிறைவு செய்தனர். இதையடுத்து, 3வது நீதிபதி சத்யநாராயணன் வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவிக்கப்படாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மீதான வழக்கின் தீர்ப்பு இன்று (25.10.2018) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாவது நீதிபதியான சத்திய நாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.

18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும், 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என்றும் அவர்கள் மீதான மனு அனைத்தையும் தள்ளுபடி  செய்து நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds