நாவூறும் நாட்டுக்கோழி ரசம்..

Advertisement

ரசம் வகையில் தக்காளி ரசம், புளி ரசம், எழுமிச்சை பழ ரசம், நண்டு ரசம்னு வித விதமான ரசம் ருசித்து பார்த்திருப்பீர்கள்.. நாட்டுக்கோழி ரசம் சமைச்சி ருசிச்சிருக்கீங்களா ?.. சரி வாங்க இப்போ ட்ரை பண்ணுவோம்..

  

தேவையான பொருட்கள்:

நாட்டு கோழி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 15
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு – பேஸ்ட் -2 ஸ்பூன்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
கருவேப்பிலை , மல்லி இலை – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பொடித்த மிளகு , சீரகம் , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக விடவும்.

இறக்கி வைத்து கருவேப்பிலை , மல்லி இலை தூவி பரிமாறவும்.நாட்டு கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>