ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறால் வறுவல் புதுமையா எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம்..
தேவையான பொருட்கள்:
சோயா சாஸ் சிறிதளவு
ஸ்பிரிங் ஆனியன் 10 கிராம்
இறால் 150 கிராம்
முட்டை - 1
தக்காளி சாஸ் சிறிதளவு
சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சில்லி சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 75 கிராம்
இஞ்சி - ஒரு இன்ச்
பூண்டு - 8
குடை மிளகாய் பாதி
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சோயா சாஸ், சோள மாவு, உப்பு இறால் ஆகியவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்த இறாலை ஒவ்வொன்றாக எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பேனில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும்.
பிறகு குடைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி அதில் சில்லி பேஸ்ட் சேர்த்து கிளறவும். பின்னர் பொரித்து வைத்த இறாலை சேர்த்து அதனுடன் கொஞ்சம் தண்ணீர்விட்டு தேவைக்கேற்ப உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் ஆகியவை சேர்த்து நன்றாகக் கிளறி வதக்கவும்.
இறுதியாக ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
அவ்ளோதாங்க சுவையான இறால் வறுவல் ரெடி..!