சுவையான தக்காளி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நாட்டுத் தக்காளி - 2
பெங்களூர் தக்காளி - 2
பச்சைமிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
கடுகு
உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு
செய்முறை
வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு, வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கவும்.
அத்துடன் நறுக்கிய தக்காளியைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேக விடவும்.
தக்காளி நன்றாக வெந்து மசிந்ததும் சீரகத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர், தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
அவ்ளோதாங்க.. ஈசியா செய்யக்கூடிய தக்காளி குழம்பு ரெடி..!