வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பரான இனிப்பு வகை அத்திப்பழ பர்ப்பி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கப்போறோம்.
தேவையான பொருட்கள்:
அத்திப்பழத் துண்டுகள் & 20
முந்திரிப் பருப்பு & 20
சர்க்கரை & ஒரு கப்
நெய் & 5 டீஸ்பூன்
பாதம் & 8
பிஸ்தா & 8
ஏலக்காய்த்தூள் & கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில், அத்திப்பழம், முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிறகு, பாதாம் தோலை நீக்கிவிட்டு அத்துடன், அத்திப்பழம், முந்திரி, பிஸ்தாவை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வானலியில் நெய் ஊற்றி, உருகியதும் அரைத்து வைத்த விழுதை அத்துடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், சர்க்கரை, நெய், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
இந்த கலவை வெந்து நன்றாக சுருண்டு வந்ததும் இறக்கவும்.
இறுதியாக, ஒரு நெய் தடவிய தட்டில் இதனை கொட்டி சமம் செய்து சதுரமாக வெடிக்கொள்ளவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மற்றும் சத்தான அத்திப்பழ பர்ப்பி ரெடி..!