புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரும் ரஜினியின் தங்கமகன்

by Sakthi, Mar 14, 2019, 17:51 PM IST
Share Tweet Whatsapp

முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் ரஜினி தயாராகி வரும் நிலையில், அவரின் பழைய சூப்பர் ஹிட் படம் ஒன்று மீண்டும் ரிலீஸாக உள்ளது.

தங்கமகன்

 

ஜனவரியில் வெளியான பேட்ட' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். போலீஸ் கதையில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது படக்குழு.

தங்க மகன்

இந்நிலையில ரஜினியின் நடிப்பில் 1983 ஆம்  வெளியான ‘தங்கமகன்’ படம், டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு மீண்டும்  ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய இத்திரைப்படத்தில்  ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.  1983 இல் இத்திரைப்படம் வெளியாகி வசூலை குவித்தது.

தற்போது இந்த ஹிட் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் தயார் செய்து வருகின்றனர்.  இறுதிக் கட்ட பணிகள் முடிந்து படத்தை திரையிட உள்ளனர். முதற்கட்டமாக டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட தங்கமகன் படத்தின் ட்ரைலரை மட்டும் ரிலீஸ் செய்துள்ளனர்.

 

 

 


Leave a reply