மொறு மொறுப்பான காரக்கடலை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 200 கிராம்
கடலை மாவு 200 கிராம்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். அதன் மீது கொஞ்சம் எண்ணெய் விட்டு கிளறி வைக்கவும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவு, கடலை மாவு, கரம் மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் வேர்கடலை போட்டு நன்றாக கிளறவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், மசாலா கலந்த வேர்கடலையை போட்டு பொரித்து எடுக்கவும்.
இறுதியாக கறிவேப்பிலையை எண்ணெய்யில் வறுத்து இத்துடன் சேர்த்தால் மொறு மொறுப்பான காரக்கடலை ரெடி..!