குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும், பீட்ரூட்டை ஹல்வாவாக செய்துக் கொடுத்தால்.. சரி, இப்போ சுலபமா பீட்ரூட் ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 300 கிராம்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 2 கப் பால்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் - 3
செய்முறை:
முதலில், ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு, முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் நெய்யுடன், துருவிய பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
பிறகு, பீட்ரூட்டில் பால் சேர்த்து நன்றாக கிளறி, வேக வைக்கவும்.
பால் பீட்ரூட்டுடன் சேர்த்து வெந்ததும், அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான பீட்ரூட் ஹல்வா ரெசிபி ரெடி..!