ஒரே மாதிரியான இட்லி சாப்பிட்டு சலித்துப்போச்சா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க.. மசாலா இட்லி ஃபிரை ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி & 15
சோளம் & கால் கப்
தக்காளி & ஒன்று
வெங்காயம் & ஒன்று
குடைமிளகாய் & பாதி
மஞ்சள் தூள் & அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் & ஒரு டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் & ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு & ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு & ஒரு டீஸ்பூன்
எண்ணெய் & தேவையான அளவு
கொத்துமல்லித்தழை & தேவையான அளவு
உப்பு & தேவையான அளவு
செய்முறை:
முதலில், இட்லியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 10 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இட்லித் துண்டுகளை அதில் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
பின்னர், அதே வாணலியில் கடுகுப் போட்டு பொறிந்ததும், நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோளம், நறுக்கிய குடைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதன்பிறகு, சில்லி சாஸ், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இந்த கலவை கொஞ்சம் கெட்டியாக மாறியதும், இட்லி துண்டுகளைச் சேர்த்து பிரட்டவும்.
இறுதியாக, கொத்துமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான மசாலா இட்லி ஃபிரை ரெடி..!