உடலுக்கு மிகவும் சத்து தரும் பாலக்கீரை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை & ஒரு பவுள்
தோசை மாவு & இரண்டு கப்
எண்ணெய் & தேவையான அளவு
செய்முறை:
முதலில் தோசைமாவை தயாராக வைத்துக் கொள்ளவும்.
பிறகு, தோசைத் தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும். தவா காய்ந்ததும், பாலக்கீரையில் காம்புடன் கூடிய பெரிய இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி தவாவில் வைக்கவும். அதை சுற்றி எண்ணெய்விட்டு ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சிம்பிள் பாலக்கீரை தோசை ரெடி..!