சாதத்திற்கு ஏற்ற சூப்பர் குழம்பு வகையான தக்காளி குழம்பு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
சோம்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 3
சின்ன வெங்காயம் -15
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 4
தேங்காய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு அது காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பட்டை, கிராம்பு, சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அத்துடன், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
வெட்டி வைத்த தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதற்கிடையே, துருவிய தேங்காய், சீரகம், சோம்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி நன்றாக மசிந்ததும், தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
இறுதியாக, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான தக்காளி குழம்பு ரெடி..!