குலாப் ஜாமூடன் கஸ்டர்டை சேர்த்து பரிமாறினால்.. ம்ம்ம்.. அடடே.. கஸ்டர்டு குலாப் ஜாமூன் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கன்டென்ஸ்டு மில்க் & அரை டின்
கஸ்டர்டு பவுடர் & 2 டேபிள் ஸ்பூன்
ரெடிமேட் ஜாமூன் மிக்ஸ் & அரை கப்
சர்க்கரை & தேவையான அளவு
எண்ணெய் & பொரிப்பதற்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமூன் மிக்ஸ், தண்ணீர் சேர்த்து பிசைந்து உருண்டைகள் செய்து பொரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு கப் தண்ணீருக்கு, ஒரு கப் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும்.
பின்னர், சர்க்கரை பாகில் குலாப் ஜாமூனை போட்டு சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இதேபோல், ஒரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு பாலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
பால் கொதி வந்ததும், தண்ணீருடன் கரைத்து வைத்த கஸ்டர்டு பவுடர் கலவையை அத்துடன் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். இந்த கலவை கெட்டியாக ஆனதும் இறக்கி, ஆறவிடவும்.
ஊறவைத்த குலாப் ஜாமூனை ஜீராவுடன் ஒரு தம்ளரில் ஊற்றி, அதன்மீது கஸ்டர்டு கலவையுடன், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும்.
அவ்ளோதாங்க.. சுவையான டபுள் ட்ரீட் இனிப்பு வகையான கஸ்டர்டு குலாப் ஜாமூன் ரெசிபி ரெடி..!