பெரிய குளம் தனித் தொகுதி வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு பின்னர், தடாலடியாக மாற்றப்பட்டுள்ளார்.
பெரியகுளத்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தேனி மாவட்ட அதிமுக கட்சித் தொண்டர்களுக்கே ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை. தொடர்ந்து நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ,தோனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத், ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் லோகிராஜனை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்த அறிமுக கூட்டத்தில் முருகன் பங்கேற்கவில்லை. அப்போதிருந்தே வேட்பாளர் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பெரியகுளம் தொகுதியில் மயில்வேல் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
முருகன் சில ஆண்டுகளாக சென்னையில்தான் இருந்து வந்துள்ளார். அமுமுக வேட்பாளர் கதிர்காமு லோக்கலில் இறங்கி வேலை செய்பவர். அவருக்கு சரியான போட்டியாளரை பெரிய குளத்தில் நிறுத்தவில்லை என்று அதிமுக தொண்டர்கள் புலம்பியபடி இருந்தனர். இப்போது, வேட்பாளர் மாற்றத்தால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வேட்பாளர் மாற்றத்துக்கு பல காரணங்கள் இருப்பினும் பி.சி.ஆர். சட்டம்தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. தேனி பகுதியில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு வேண்டியவர்கள் பலர் நிலங்களில் மண்ணை தோண்டி எடுத்து விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். முருகனின் தந்தை இந்த தொழிலில் தரகர் போல செயல்பட்டு வந்துள்ளார்..தங்கள் தொழிலுக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது பி.சி.ஆர் வழக்கு தொடுத்திருந்ததாகவும் இந்தச் சட்டத்தை காரணம் காட்டியே அவர் பலரை மிரட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
முருகன் நிறுத்தப்பட்டதும் தேனியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகார்கள் குவிந்துள்ளன. இதனால், அவர் ஷாக் ஆகி துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் விவாதித்துள்ளார். மற்ற சமூகத்தினர் அதிமுக - வுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று தேனியில் இருந்து வந்த புகார் கடிதங்கள் சொல்கின்றன என்றும் பன்னீர்செல்வத்திடட் கூறியுள்ளார். தொடர்ந்து, முருகன் போய் மயில்வேல் பெரியகுளத்துக்கு பறந்து வந்தார். .