அனைவருக்கும் பிடித்த மீன் பிரியாணி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் - அரை கிலோ
பாஸ்மதி அரிசி - 2 கப்
தனியா - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
நட்சத்திர சோம்பு - 1
பட்டை - 1
பிரியாணி இலை - 2
தயிர் - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில், தனியா, சோம்பு, சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பட்டை சேர்த்து வதக்கவும்.
இது ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்யவும்.
பாத்திரத்தில், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையில், முள் இல்லாத மீன் துண்டுகளை சேர்த்து கிளறி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இதற்கிடையே, பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தில், எண்ணெய்விட்டு சூடானதும், பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வந்ததும், ஊற வைத்துள்ள அரிசி, உப்பு சேர்த்து 70 சதவீதம் வேக வைக்கவும்.
வாணலியில், 3 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு உருகியதும், ஊறவைத்த மீன் துண்டுகளை போட்டு வேக வைக்கவும். அதன்மீது, புதினா இலை, கொத்தமல்லி, பொறித்த வெங்காயம் சேர்த்து தூவிவிடவும். சாதம் 70 சதவீதம் வெந்ததும் அதன்மீது லேயராகப் போடவும். மீண்டும் அதன்மீது கொத்தமல்லி, புதினா தூவிவிடவும். அதன்மீது, மீண்டும் சாதத்தைப்போட்டு மீதமுள்ள கொத்தமல்லி, புதினா, பொறித்த வெங்காயம் தூவிவிடவும்.
இதன்பிறகு, மிதமான சூட்டில் மூடியைப் போட்டு சுமார் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக, மசாலா சாதம் முழுவதும்படும்படி பக்குவமாக கிளறினால், சுவையான மீன் பிரியாணி ரெடி..!