நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் மிட்டாய் வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முழு நெல்லிக்காய் - அரை கிலோ
சர்க்கரை - அரை கிலோ
செய்முறை:
வாணலியில், தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், நெல்லிக்காயைப் போட்டு வேக வைக்கவும்.
நெல்லிக்காய் வெந்ததும், தனியாக எடுத்து ஒவ்வொரு சுளையாக எடுத்து பாத்திரத்தில் போடவும்.
இதுனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி சுமார் மூன்று நாட்களுக்கு ஊறவிடவும்.
மூன்று நாட்களுக்கு பிறகு, சர்க்கரை தண்ணீரை வடிகட்டி நெல்லிக்காயை தனியா எடுத்து, இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
பிறகு, அத்துடன் சர்க்கரை பொடி சேர்த்து கிளறவும்.
அவ்ளோதாங்க.. சுவையான மற்றும் சத்தான நெல்லிக்காய் மிட்டாய் ரெடி..!