பெங்களூரு பௌலர்களை கலங்கடித்த காட்டடி ரஸ்ஸல் - `ஒன் மேன் ஷோவால் 3வது வெற்றியை பதிவு செய்த கேகேஆர்

KKRiders win by 5 wickets against rcb

by Sasitharan, Apr 6, 2019, 06:22 AM IST

ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்த பெங்களூரு அணி இந்த முறை சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் புதிய நம்பிக்கையுடன் களமிறங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஹெட்மெயருக்குப் பதிலாக டிம் சவுத்தியும், உமேஷ் யாதவுக்குப் பதிலாக பவன் நெகியும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, டிம் சவுத்தி இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கிறார். கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக, நிகில் நாயக்கிற்குப் பதிலாக சுனில் நரேன் களமிறங்கினார்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் இறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அடித்து ஆடினர். அணியின் ஸ்கோர் 64 ஆக இருக்கும்போது பார்திவ் படேல் 25 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்து ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினார். இதையடுத்து, கேப்டன் கோலியுடன் டிவிலியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, கொல்கத்தா அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன் குவித்தனர். கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 31 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 63 ரன்னில் வெளியேறினார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக லயன் மற்றும் சுனில் நரைன் களம் புகுந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான சுனில் நரைன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் வெளியேறினார். இதன்பின் லயன் உடன் உத்தப்பா ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 33 ரன்கள் எடுத்தபோது உத்தப்பாவும் 43 ரன்கள் எடுத்தபோது லயனும் வெளியேறினர். ரானா அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் கேப்டன் தினேஷ் கார்த்திக் விரைவாக அவுட் ஆனாலும், ரஸ்ஸல் தனி ஆளாக களத்தில் இருந்து வெற்றி தேடி தந்தார். சைனி, சிராஜ், சவுத்தி என பெங்களூரு பௌலர்களை தனது காட்டடியால் கலங்கடித்தார். குறிப்பாக சவுத்தி வீசிய 19வது ஓவரை எதிர்கொண்ட ரஸ்ஸல் 4 சிக்ஸர் ஒரு பவுண்டரி என 28 ரன்கள் சேர்த்தார். இந்தப்போட்டியில் 13 பந்துகளை மட்டும் சந்தித்த அவர் மொத்தம் 7 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 48 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். கடைசியில் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

You'r reading பெங்களூரு பௌலர்களை கலங்கடித்த காட்டடி ரஸ்ஸல் - `ஒன் மேன் ஷோவால் 3வது வெற்றியை பதிவு செய்த கேகேஆர் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை