சைவ பிரியர்களுக்கான சுண்டைக்காய் பிரியாணி இதோ..

பிரியாணி என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு டிஷ். பலவகை பிரியாணி வகைகளை பார்த்திருப்போம் . அந்த வகையில், இன்று சுண்டைக்காயில் எப்படி பிரியாணி செய்றதுனு பார்ப்போம்..

தேவையானவை:

பாசுமதி அரிசி,
பிஞ்சு சுண்டைக்காய் – தலா ஒரு கப்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பூண்டு – 5 பல், எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள:

துருவிய தேங்காய் – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை (சேர்த்து) – அரை கப்,
தக்காளி – ஒன்று,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு.

வறுத்துப் பொடிக்க:

பிரிஞ்சி இலை – ஒன்று, சோம்பு, ஏலக்காய்,
கிராம்பு எல்லாம் சேர்ந்து – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ள வும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக் காய்களை வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து அரை கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்து, பச்சை வாசனை போனதும், சுருள வதக்கி… வறுத் துப் பொடித்த பொடி சேர்த்து இறக்கவும். இதில் வெந்த சாதத்தை போட்டுக் குழைந்து விடாமல் கிளறி, பரிமாறவும்.

குறிப்பு:

விருப்பப்பட்டால் சுண்டைக்காயை இரண்டாகவும் நறுக்கி வதக்கி, வேக வைக்கலாம். வயிற்றுப்பூச்சி மற்றும் குடற்பூச்சிகளை ஒழிக்கும் குணம் சுண்டைக்காயிடம் உண்டு.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??