நடிகர் ரஜினி படித்துக்கூட பார்த்திருக்கமாட்டார் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு கேடு - நல்லுசாமி தாக்கு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பான 5 தொகுதிகளை நடிகர் ரஜினி படித்துக்கூட பார்த்திருக்கமாட்டார் என்றும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு கேடு என தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி விமர்சித்துள்ளார்.

Feb 2, 2018, 17:45 PM IST

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பான 5 தொகுதிகளை நடிகர் ரஜினி படித்துக்கூட பார்த்திருக்கமாட்டார் என்றும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு கேடு என தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி விமர்சித்துள்ளார்.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மானியம், இலவசம், கடன், கடன் தள்ளுபடி, காப்பீடு, நிவாரணம் போன்றவற்றால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க முடியாது.

ஊதிய கமிட்டி பரிந்துரையை அரசு நடைமுறைப்படுத்துவது போன்று விவசாயக் கமிட்டியின் பரிந்துரையையும் ஏற்று அரசு செயல்படுத்தினால் மட்டுமே குடியரசுத்தலைவர் கூறியது போன்று விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாகக்கப்படும்” என்றார்.

மேலும், “தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை சந்திப்பது சடங்காக மட்டுமே இருக்கும் என்றும், காவிரி நீருக்காக தமிழகம் யாரிடமும் கெஞ்ச தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் போன்று நாள்தோறும் நதிநீர் பங்கீடு என்று காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை திருத்தி அமைக்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பான 5 தொகுதிகளை நடிகர் ரஜினி படித்துக்கூட பார்த்திருக்கமாட்டார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு கேடு” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading நடிகர் ரஜினி படித்துக்கூட பார்த்திருக்கமாட்டார் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு கேடு - நல்லுசாமி தாக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை