நீட் தேர்வு விவகாரம்: தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து போராட்டம் - எம் எச் ஜவாஹிருல்லா

by Isaivaani, Feb 2, 2018, 17:47 PM IST

நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு கோரும் இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதில் தமிழக அரசு காட்டிவரும் மெத்தனப்போக்கை கண்டித்தும், இனியும் காலம் தாழ்த்தாமல் அத்தீர்மானங்களுக்குக் குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற கோரியும், தமிழக எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், சமூக இயக்கங்கள் அடங்கிய ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் பிப்ரவரி 5 தேதி மாவட்ட தலைநகரங்களில் மக்கள் பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவ கல்லூரியில் சேர்ந்து பயில நீட் என்ற நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது மத்திய அரசு, இந்த நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஏகமனதாக இரு மசோதாக்கள் நிறைவேற்றி அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வழங்கிப் பல மாதங்கள் ஆன நிலையில் அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. தமிழகம் கட்டிக்காத்து வந்துள்ள சமூக நீதியை மாய்க்கும் மாபெரும் அநீதி திட்டமே நீட் தேர்வாகும். 2018-19 ஆம் ஆண்டிற்காக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே முதல் ஞாயிற்றுக்கிழமை என்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்தத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற இதுவரைக்கும் எடப்பாடி தலைமையிலான மாநில அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மோடி அரசு மறுத்து வருகிறது.

நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு கோரும் இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதில் தமிழக அரசு காட்டிவரும் மெத்தனப்போக்கை கண்டித்தும், இனியும் காலம் தாழ்த்தாமல் அத்தீர்மானங்களுக்குக் குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற கோரியும், தமிழக எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், சமூக இயக்கங்கள் அடங்கிய ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் பிப்ரவரி 5 தேதி மாவட்ட தலைநகரங்களில் மக்கள் பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழுஆதரவை அளித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டு கண்டன முழக்கத்தை எழுப்புவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்குக் கொள்ள உள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

You'r reading நீட் தேர்வு விவகாரம்: தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து போராட்டம் - எம் எச் ஜவாஹிருல்லா Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை