மாலை நேரத்தில் சுடச்சுட முட்டை போண்டா சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்கள் உடனே செய்து சாப்பிடுங்கள்.. இதோ உங்களுக்காக முட்டை போண்டா ரெசிபி..
தேவையான பொருட்கள்:
முட்டை & 12
மல்லித் தூள் & அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா & கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் & ஒன்றரை டீஸ்பூன்
கடலை மாவு & 4 கரண்டி
அரிசி மாவு & 2 கரண்டி
உப்பு
செய்முறை:
முதலில் முட்டையை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
இதற்கிடையே, ஒரு பாத்திரத்தில் மிளகாயத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு, கடலை மாவு, அரிசி மாவு, தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து பஜ்ஜி மாவு பதத்துக்கு தயார் செய்துக் கொள்ளவும்.
முட்டை வெந்ததும் அதன் ஓடை தனியாக எடுத்துவிட்டு, பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெட்டி வைத்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில்விட்டு பொறித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான முட்டை போண்டா ரெடி..!