பச்சை மாங்காய் ஜூஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கிளி மூக்கு மாங்காய் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
முதலில், மாங்காயை சுத்தயாக கழுவியப்பிறகு, தோல்லை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு தனியாக எடுத்துக் கொள்ளவும்.
மாங்காய் சாறில் தோல் நீக்கிய இஞ்சி துண்டு சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். இஞ்சி சாறு முழுவதும் இறங்கியதும் இஞ்சியை வெளியில் எடுக்கவும்.
மாங்காய் சாரில் தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அடித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் புதினா சேர்த்துக் கொள்ளலாம்.
அவ்ளோதாங்க.. புது சுவையில் பச்சை மாங்காய் ஜூஸ் ரெசிபி ரெடி..!