சூப்பரான சாட் ரெசிபி உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
வேகவைத்த கேரட் - 2
சீஸ்
பிரெட் க்ரம்ப்ஸ் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
சோள மாவு - 4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அத்துடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சில்லி பிளேக்ஸ், நறுக்கிழ கொத்தமல்லி, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு, இதில் இருந்து ஒரு பிடி எடுத்து நடுவில் சீஸ் வைத்து உருண்டைகளாக்கவும்.
பின்னர், வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
அதற்குள், மற்றொரு கிண்ணத்தில் சோள மாவு இரண்டு டீஸ்பூன் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் பிரெட் க்ரம்ப்ஸ் தயாராக வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டைகளை எடுத்து சோள கலவையில் முக்கி பிறகு ப்ரட் க்ரம்ஸ்ஸில் பிரட்டி சூடான எண்ணெய்யில்விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெசிபி ரெடி..!