கர்நாடக உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் அமோகம்... பாஜகவுக்கு சறுக்கல்

Karnataka urban Local body election, Congress wins more seats than BJP:

by Nagaraj, May 31, 2019, 21:22 PM IST

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே வாரத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தனித்தனியே போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு இந்த இரு கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தன. மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 25 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனால் கர்நாடகத்தில் ஆளும் கூட்டணி அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரை வளைத்து, பாஜக ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்யலாம் என்று கூட பேசப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 29-ந் தேதி கர்நாடகத்தில் 61 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1300 வார்டுகளில் தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 509 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 366 வார்டுகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 174 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 160 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியே போட்டியிட்டன. அப்படியிருந்தும் பாஜகவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவுக்கு, இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி கிட்டாதது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஆட்சி பறிபோகும் ஆபத்தில் இருந்த குமாரசாமி தலைமையிலான மாநில அரசுக்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

You'r reading கர்நாடக உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் அமோகம்... பாஜகவுக்கு சறுக்கல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை