மொறு மொறுனு முள்ளங்கி சாப்ஸ் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
சமைக்க தேவையானவை
பிஞ்சு முள்ளங்கி - கால் கிலோ
கடலைப்பருப்பு - அரை கப்
வரமிளகாய் - 10
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய மல்லித்தழை
உப்பு - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உணவு செய்முறை : முள்ளங்கி சாப்ஸ்
ஸ்டெப் 1:
முள்ளங்கியை துருவி, நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள். கடலைப்பருப்பை ஊறவிட்டு, வரமிளகாய், சோம்பு, பூண்டு, வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
ஸ்டெப் 2:
பிழிந்த முள்ளங்கையை, அரைத்த பருப்புக் கலவையுடன் பிசறி, மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு, மொறுமொறுப்பாக வேகவிட்டு அள்ளுங்கள்.