ஆரோக்கியம் நிறைந்த கீரை வடை செய்வது எப்படி பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை - அரை கட்டு
கடலைப்பருப்பு - ஒரு கிண்ணம்
சிறிய வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4
இஞ்சி - ஒரு துண்டு
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
கீரையை சிறிதாக நறுக்கி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். அதேவேளையில் கடலைப்பருப்பை சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்றாக ஊறிய கடலை பருப்புடன் சோம்பு, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கெட்டியான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து வடைக்கு தேவையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் வடையை தட்டி போட்டால் ஆரோக்கியமான சுவையான கீரை வடை தயார்..!