உடல் எடையை ஆரோக்கியமான வழியில் அதிகப்படுத்த நினைப்போர் இந்த ரெசிபியை தொடர்ந்து செய்து சாப்பிட்டு வாங்க.. சரி, இப்போ கொண்டைக்கடலை தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 3 கப்
இட்லி அரிசி - ஒரு கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், கொண்டைக்கடலை, இட்லி அரிசி, வெந்தயத்தை தனித்தனியாக சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு, கொண்டைக்கடலை, வெந்தயத்தை கிரைண்டைரில் மையாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
இதேபோல், அரிசியை மையாக அரைத்து கொண்டைக்கடலை மாவுடன் சேர்க்கவும். கூடவே, உப்பு சேர்த்து நன்றாக கரைத்து சுமார் 5 மணி நேரம் புளிக்கவிடவும்.
பிறகு, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து, வழக்கம்போல் தோசை சுட்டு சுடச்சுட பரிமாறவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை ரெடி..!