குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு லாலிபாப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - கால் கப்
மைதா - 2 டேபிஸ் ஸ்பூன்
பிரெட் கிரம்ப்ஸ் - அரை கப்
மிளகாயத்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும்.
அத்துடன், வெங்காயம், கொத்தமல்லித்தழை, பிரெட் கிரம்ப்ஸ், மிளகாயத்தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கிண்ணத்தில் பிரெட் கிரம்ப்ஸ் தயாராக வைக்கவும்.
தற்போது, உருளைக்கிழங்கு கலவையில் இருந்து சிறிதாக எடுத்து உருண்டைகள் செய்து, அவற்றை மைதா கலவையில் முக்கி, பிறகு பிரெட் கிரம்ப்ஸில் பிரட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து வேகவிட்டு எடுக்கவும்.
அட்டகாசமான சுவையில் உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி..!