வித்தியாசமான சுவையில் ஸ்வீட் கார்ன் கிரேவி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6
காய்ந்த மிளகாய் - 2
முந்திரி - 6
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 3
உப்பு
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, முந்திரி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அத்துடன் அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
பிறகு, கரம் மசாலா, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
ஸ்வீட் கார்ன் சேர்த்து வேகவைத்த பின், கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கவும்.
அட்டகாசமான சுவையில் ஸ்வீட் கார்ன் ரெடி..!