அட்டகாசமான சுவையில் பேபி கார்ன் மசாலா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - ஒரு பேக்கெட்
பூண்டு - 8
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், பேபி கார்னை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு, சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சோம்பு போட்டு பொரித்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர், அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பிறகு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
இந்நிலையில், பேபி கார்ன் சேர்த்து கிளறி வேகவிடவும்.
பேபி கார்ன் நன்றாக வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தூவி இறக்கவும்.
சுவையான பேபி கார்ன் மசாலா ரெடி..!