ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!

Advertisement

ஐக்யா என பெற்றோர்கள் சூட்டிய பெயரை ஐக்கி பெர்ரி என்று ஸ்டைலாக மாற்றிக் கொண்ட இந்த ஸ்டைலிஷ் தமிழச்சி, தஞ்சை பெண் என்று யாரும் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு தனது உடை, உருவம் என அனைத்தையுமே தன் துறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளார்.

என்னதான் பார்க்க இங்கிலிஷ்காரி மாதிரி இருந்தாலும், வாயை திறந்து பேசினால், அழகிய தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

தமிழ் பெண்ணால், உலகம் முழுவதும் சென்று, ராப் இசை நிகழ்ச்சிகளில் கலக்க முடியுமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்த தஞ்சாவூர் தமிழச்சி ஐக்கி பெர்ரி.
புரட்சி கருத்துக்களை தங்களுக்கு தெரிந்த மொழியில் கூற ஆப்ரிக்கர்கள் உருவாக்கியது தான் ராப் இசை.

புரட்சி கருத்துக்களுக்கு மட்டுமின்றி, ஆசை, காதல், மகிழ்ச்சி, கோபம் என பலவித உணர்வுகளை இன்று ராப் இசை மூலம் பலரும் மக்களிடையே கொண்டு சேர்த்து வருகின்றனர்.

பொல்லாதவன், குருவி படங்களில் பாடிய யோகி பி பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். தமிழில் ராப் இசையை சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.
அந்த வரிசையில் ராப் இசையில், ரொமாண்டிக் பாடல்கள், அடிப்படை தேவை கருத்துகள் என பலவற்றை பாடி வரும் ஐக்கி பெர்ரி, ஒரு முழு நேர மருத்துவரும் கூட, ஆம், இவர் ஒரு காஸ்மெடிக் சர்ஜெரியன்.

சினிமா துறையில் பிரபலமாக திகழும் பல முன்னணி நடிகர்களுக்கு காஸ்மெடிக் சர்ஜெரியனாக இருந்து வரும் ஐக்கி பெர்ரி, ஏழை மக்களுக்காக இலவச மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.

மியூசிக், மெடிசின் இரண்டும் தனது இரண்டு கண்கள் என்று சொல்லி பணியாற்றி வரும் ஐக்கி பெர்ரி மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகள்.

ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>