லீக்கானது பிகில் பட பாட்டு அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!

by Mari S, Jul 17, 2019, 15:37 PM IST
Share Tweet Whatsapp

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் பிகில் பட பாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதனால், விஜய், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் உள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கிஷெராஃப், விவேக், யோகிபாபு என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள படம் தான் பிகில். வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சில விஷமிகள் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடலை லீக் செய்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரஹ்மானே பாடியுள்ள இந்த பாடல், படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பாடல் என்பதால், யார் இதை செய்தார்கள் என படக்குழுவினர் பயங்கர கடுப்பில் தேடி வருகின்றனர்.

மேலும், இந்த பாடலை ரசிகர்கள் ஷேர் செய்ய வேண்டாம் என படக்குழு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய அளவில் டிரெண்டாகும் மீ - விஜய் ஹேஷ்டேக்!


Leave a reply