நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், தற்போதே விஜய் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி விட்டனர். ட்விட்டரில் Me - Vijay என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
விஜய்யும் நானும் என்ற பொருளோடு, மீ - விஜய் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. தளபதி 63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பிறந்த நாள் கொண்டாட்டமாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் தினமும் விஜய் குறித்து ஏதாவது ஒரு செய்தியை பதிவிட்டும், டிரெண்டாக்கியும் வருகின்றனர்.
விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டங்கள் தற்போதே தொடங்கி விட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் வீதிகளில் பேனர்கள் வைத்து தங்களது கொண்டாட்டங்களை துவங்கியுள்ளனர்.
மேலும், தளபதி 63 படத்தில் விஜய்க்கு டபுள் ரோல் என்றும், அப்பா விஜய் பேர் மைக்கேல் என்றும், மகன் விஜய் பேர் ’பிகில் ’ என்றும் வைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் கசிந்துள்ளது.
ஒரு வேளை படத்திற்கும் பிகில் என்ற தலைப்பு வைக்கப்பட்டாலும் வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.