விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

by Mari S, Jun 11, 2019, 17:18 PM IST

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படமொன்றில் கமீட் ஆகியுள்ளார்.

க/பெ ரணசிங்கம் எனும் புதிய படத்தில் தான் விஜய் சேதுபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதியுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா திரைப்படத்தில் கெளசல்யா முருகேசன் கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து பெரிய படங்கள் கிடைத்து வருகின்றன.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அறம், ஐரா படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை பி. விருமாண்டி என்பவர் இயக்குகிறார்.

கணவன் பெயர் ரணசிங்கம் என்ற டைட்டிலில் படம் உருவாக உள்ளதால், இந்த படத்தில் விஜய்சேதுபதியை விட ஐஸ்வர்யா ராஜேஷுக்குத் தான் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Cinema News

அதிகம் படித்தவை