ஆடை பட இயக்குநரை அழ வைத்த தோனி!

Aadai Movie Director cries for India loss in World Cup semis

by Mari S, Jul 11, 2019, 17:26 PM IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், இந்த இழப்பை தாங்க முடியாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

பல சினிமா பிரபலங்களும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல, ஆடை படத்தின் இயக்குநரான ரத்தினகுமார், தனது குழந்தை பருவம் இனிதாக முடிந்தது. மிஸ் யூ தோனி என அழும் ஸ்மைலியை போட்டுள்ளார். மேலும், சீக்கிரமா இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

அடுத்த உலக கோப்பை போட்டிக்கு தோனி அணியில் இருக்க மாட்டார் என்ற கருத்து பலரும் அறிந்த ஒன்று என்பதால், ஆடை படத்தின் இயக்குநர் ரத்தின குமாரும் அதே கருத்தை வலியுறுத்தி இந்த உருக்கமான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை