காப்பான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சன் டிவி!

Kaappan Satellite rights bagged by Sun tv

by Mari S, Jul 11, 2019, 17:22 PM IST

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் காப்பான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கே.வி. ஆனந்த், சூர்யா கூட்டணி இணைந்துள்ளது. காப்பான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஜிகே படம் படு தோல்வியை சந்தித்ததால் சூர்யா இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.
மேலும், சாயிஷாவின் கணவர் மற்றும் நடிகருமான ஆர்யாவும் இந்த படத்தில் நடித்துள்ளார். ஆர்யா, சாயிஷா திருமணம் சமீபத்தில் நடந்ததால், இந்த படத்தில் சாயிஷாவுக்கு யார் ஜோடி என்கிற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சாயிஷா ஜோடியாக நடித்த சமையத்திலேயே இந்த படத்தில் கமீட் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அநேகன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஹாரிஷ் ஜெயராஜ் கே.வி. ஆனந்த் கூட்டணி உருவாகி உள்ளது.

படத்தின் டிரைலர் வெளியாகி பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், கடும் போட்டிக்கு இடையே இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை