உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய கேழ்வரகு களி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - ஒரு கப்
நெய்
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதிவந்ததும் கேழ்வரகு மாவு சேர்த்து கிளறிவிடாமல் வேகவிடவும்.
பாதி வெந்ததும், ஒரு மரக்கறண்டியைக் கொண்டு கட்டி இல்லாமல் கிளறிவிடவும்.
கேழ்வரகு மாவு நன்றாக வெந்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
இறுதியாக, இந்த கலவையை ஒரு நெய் தடவிய தட்டில் போடவும்.
கையை ஈரமாக்கிக் கொண்டு ஒவ்வொருப் பிடியாக எடுத்து உருண்டையாக்கிக் கொள்ளவும்.
அவ்ளோதாங்க.. சுடச்சுட களி கருவாட்டுக் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.