வீட்டிலேயே சுவையான முட்டை ஆப்பம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
முட்டை
அரிசி - ஒரு கப்
அவல் - அரை கப்
தேங்காய் 2 தேக்கரண்டி
சிக்கன் குழம்பு - ஒரு கப்
செய்முறை:
முதலில் அரிசியை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி சுமார் 4 மணி நேரம் ஊறவிடவும்.
இதேபோல், அவலை அரை மணி நேரம் ஊறவிடவும்.
பின்னர், அரிசி மற்றும் அவலை மையாக அரைத்து சுமார் 12 மணி நேரம் விடவும்.
அத்துடன் தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கலக்கி தயாராக வைக்கவும்.
கிண்ணத்தில் கறி குழும்பு, முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும்
ஆப்பக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு தடவி மாவு ஊற்றி கடாய் முழுவதும் சுற்றி மூடிப்போட்டு 10 வினாடிக்கு மூடி விடவும்.
பின்னர், முட்டை கலவையை நடுவில் ஊற்றி கடாய் முழுவதும் பரப்பும்படி சுற்றிவிட்டு மூடிப்போட்டு வேகவிட்டு இறக்கவும்.
அசத்தலான சுவையில் கறி முட்டை ஆப்பம் ரெடி..!