போர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே!

How to make groundnut laddu

by Mari S, Sep 9, 2019, 18:08 PM IST

முந்திரி, திராட்சை போட்ட லட்டு, திருப்பதி லட்டு போன்றவற்றை பெரும்பாலும், சாப்பிட்டு சுவைத்து இருப்பீர்கள், ஆனால், வேர்கடலையிலும் லட்டு செய்யலாம் என்பது தெரியுமா? இதோ அதற்கான ரெசிபி..

வேர்கடலை லட்டு செய்வது எப்படி?

வேர்க்கடலையை முதலில் ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். இவ்வாறு வறுத்தால் மேல் உள்ள தோல் நீங்கி முந்திரி போன்று வேர்க்கடலை கிடைக்கும்.

பின்னர் அந்த வேர் கடலையை அம்மி அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த வேர்கடலையுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒருமுறை அரைத்து அனைத்தும் ஒரு சேர கலக்குமாறு செய்து கொள்ள வேண்டும்.

இறுதியாக, அரைத்த வேர் கடலை கலவையை ஒரு தட்டில் போட்டு சின்ன சின்ன உருண்டைகளாய் பிடித்தால் சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு ரெடி!

பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தைகளின் உடல் எடையை கூட்ட வேர்க்கடலை ஒரு நல்ல ஊட்டச்சத்தான உணவு. வெறுமனே வேர்க்கடலையை திண்ண சொன்னால், அதிகளவில் சாப்பிட முடியாது. இப்படி லட்டு செய்து கொடுத்தால், அதிகளவிலான வேர்கடலையின் சத்து அவர்களின் குழந்தையின் எடையை கூட்ட பேருதவியாக இருக்கும்.

மேலும், குழந்தைகளுக்கு மாலை நேரத்தில், கடையில் இருந்து திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்து அவர்களின் வயிற்றை கெடுக்காமல், வீட்டிலேயே இப்படி லட்டு செய்து கொடுத்தால், குழந்தைகள் விருப்பமாக ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

You'r reading போர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே! Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை