தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி...தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள்.சரி வாங்க தாமரை விதையில் எப்படி மசாலா ப்ரை பண்ணலாம் என்பதை பார்க்கலாம்... தேவையான பொருள்கள்:- தாமரை விதை-100 கிராம் வறுத்த வேர்க்கடலை-3/4 கப் மிளகு தூள்-1 ஸ்பூன் கறிவேப்பிலை-சிறிதளவு நெய்-11/2 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை:- ஒரு கடாயில் நெய் ஊற்ற வேண்டும்.நெய் காய்ந்தவுடன் அதில் வேர்க்கடலை,கறிவேப்பிலை சேர்த்து மொறு மொறுப்பாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு தாமரை விதையை கடாயில் சேர்த்து 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்க வேண்டும். விதைகள் பொன்னிறமாக மாறியவுடன் அடுப்பை அனைத்து விடவும். மசாலா மக்கானா எனும் தாமரை விதையை சூடாக பரிமாறி சுவைத்திடுங்கள்.தாமரை விதை உடல் ஆரோக்கியத்தை மேலும் கூட்டும் தன்மையுடையது...