பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார். இது பாலிவுட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் போதைப் பொருள் பயன்படுத்ப்படுத்துவதாக போலீ ஸுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை தொடங்கி உள்ளது. டிவி நடிகை அனிகா என்பவரைப் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்தபோது கன்னட திரையுலகில் பல நடிகர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு போதைப் பொருள் விற்று வந்தது தெரியவந்திருக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கன்னட இயக்குனர் இந்திரஜித் இது குறித்து ஆதாரங்களை போலீசிஸிடம் ஒப்படைத்திருக்கிறார்.
பிரபல கன்னட நடிகர் பவன் சவுரியா என்பவர் அனிகாவிடம் இருந்து போதை மருந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த திருமணம் திடீரென நின்று போனதாகவும் பெண் வீட்டார் இந்த திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கங்கனா தெரிவிப்பதற்கு முன்னரே 2 வருடத்துக்கு முன் தெலுங்கு திரையுலகில் போதைப் பொருள் பயன்படுத்துவதாகத் தகவல் வெளியானதுடன் அது குறித்து நடிகை சார்மி, இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்ட பல பேரிடம் விசாரனை நடந்தது. அதன்பிறகு அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.