குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி வெஜ் ரோல்..

Mar 16, 2018, 14:44 PM IST

ஸ்கூல்ல இருந்து டயர்டா வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு பிடித்த மாதிரி உணவுகள் சமைத்து குடுத்த செம்ம குஷியா ஆயிடுவாங்க.. அந்த வகையில குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி வெஜ் ரோல் மாலை டிபன் ஆக செஞ்சி குடுங்க.. சரி, சப்பாத்தி வெஜ் ரோல் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவையானப் பொருட்கள் :

சப்பாத்தி - 3

பெரிய வெங்காயம் - 2

கேரட் - 2

முட்டைகோஸ் - சிறிதளவு

குடமிளகாய் - 1

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 3 பல்

பச்சைமிளகாய் - 2

மிளகாய்த்தூள் – ½ TSP

எலுமிச்சைச் சாறு - 1 TSP

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், கேரட், முட்டைகோஸ், இஞ்சி, குடமிளகாய், கொத்தமல்லித்தழை, பு ண்டு மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சு டானதும் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் முட்டைகோஸ், கேரட் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் குடமிளகாய், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பிறகு காய்கறிகள் முக்கால் பதத்துக்கு வெந்ததும், அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளற வேண்டும். கடைசியாக இந்தக் கலவையை சப்பாத்தியில் வைத்து அப்படியே சுருட்டி பரிமாறினால், சுவையான வெஜ் சப்பாத்தி ரோல் தயார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி வெஜ் ரோல்.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை